“ஜனநாயகன் NDA கூட்டணிக்கு வரவேண்டும்”… மீண்டும் விஜய்க்கு அழைப்பு விடுத்த தமிழிசை…!

By Nanthini on மார்கழி 28, 2025

Spread the love

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தேமுதிக விஜயகாந்த் குருபூஜை விழாவாக அனுசரித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். அதேபோல விஜயகாந்த் நினைவிடத்தில் பல அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். அதன்படி விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அண்ணன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதற்காக பெருமை கொள்கின்றேன். என்னை தங்கச்சி என்று அழைப்பார். அப்படி அழைக்கும் சில அரசியல்வாதிகளில் விஜயகாந்த் முதன்மையானவர். அரசியலில் நேர்மையாக இருந்தவர். தொடர்ந்து விஜயகாந்த் மோடி மீது அன்புடன் இருந்தவர். தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைய வேண்டும் என விஜயகாந்த் நினைத்தார்.

   

அது நிறைவேற வேண்டும். விஜய் எங்களோடு வருவது தான் அவருக்கு பாதுகாப்பு என்ற நயினார் நாகேந்திரனின் கருத்து எதார்த்தமான உண்மைதான். ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் ஒன்றாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியின் வாக்குகள் பெரிய கூடாது என்றே எல்லோரும் கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் அறிவித்த பிறகும் கூட பாஜக தரப்பில் தொடர்ந்து விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.