“அம்மா எப்போ வருவாங்க” பக்கத்து வீட்டு இளைஞருடன் ஓடிய தாய்… ஏக்கத்தோடு காத்திருக்கும் 5 பிள்ளைகள்… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

By Soundarya on மார்கழி 28, 2025

Spread the love
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில், ஐந்து குழந்தைகளின் தாய் தனது பக்கத்துக்கு வீட்டு இளைஞருடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஐந்து பிள்ளைகளையும் தவிக்கவிட்டுச் சென்ற அந்தப் பெண்ணின் செயல், அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் குழந்தைகள் அழுது துடிப்பது காண்போரின் நெஞ்சத்தை உருக்குவதாக உள்ளது.

தாய் மீண்டும் வருவார் என்ற ஏக்கத்துடன் அந்தச் சிறு குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வாசலையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகளின் இந்த நிலைமையைக் கண்டு அண்டை வீட்டாரும் உறவினர்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். குடும்பப் பொறுப்புகளைத் துறந்துவிட்டுச் சென்ற தாயின் செயலால், அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.