நமது வீடுகளில் பெரும்பாலும் கரப்பான் பூச்சியின் அட்டகாசம் என்பது அதிகமாகவே இருக்கும். சமையலறை, சாப்பாடு வைக்கும் பாத்திரங்கள், பாத்திரம் கழுவும் இடம் என அனைத்து இடங்களிலும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். இவ்வாறு எதிர்பாராமல் தோன்றும் கரப்பான் பூச்சிகள் பெரும்பாலும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் பல தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. வீட்டு சமையலறையில் ஏதாவது ஒரு பொருள்களை எடுத்தாலும் அதற்கு பின்னால் ஒட்டிக்கொள்ளும் அல்லது மறைந்து கொண்டு இருக்கும். இவை சில நேரங்களில் பறந்து வந்து நம்முடைய முகத்திலும் வந்து விடுகின்றன.
அதனால் குழந்தைகள் கரப்பான் பூச்சியை கண்டு பயங்கரமாக அலறுகின்றனர். இவை பெரும்பாலும் கழிவறை, குளியலறை மற்றும் பாத்திரம் துலக்கும் தொட்டி ஆகியவற்றில் தான் அதிகமாக இருக்கும். இவை இறுதியில் நோயை பரப்பக்கூடியவையாக இருப்பதால் பலருக்கும் இதனை கண்டால் அருவருப்பாகத் தான் இருக்கும். உலக அளவில் சுமார் 1300 வகையான கரப்பான் பூச்சிகள் இருந்தாலும் மனிதர்களை வாழ்வாதாரத்திற்கு 30 வகையான கரப்பான் பூச்சிகள் சார்ந்துள்ளது.
கரப்பான் பூச்சி சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதுடன் சுவாச பிரச்சனை, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களையும் ஏற்படுத்துகின்றன. எனவே வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இல்லாமல் இருக்க சில முறைகளை நாம் பின்பற்றுவது அவசியம். அதாவது குப்பைகளை வீட்டில் அதிகமாக சேர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிவறையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
சுவர் மற்றும் குழாய்களில் இருக்கும் சிறு சிறு துவாரங்களை அடைத்து விட வேண்டும். அட்டைப்பெட்டி மற்றும் புத்தகம் ஆகியவற்றை சுத்தமாக அடுக்கி வைக்க வேண்டும். அடிக்கடி கரப்பான் பூச்சியை அகற்றும் மருந்தை பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் வந்த பின்பு கெமிக்கல் கலந்த மருந்தை பயன்படுத்தாமல் வருவதற்கு முன்பு பாதுகாப்பது அவசியமாகும்.
பிரியாணி இலையை பொடியாக அரைத்து கற்பூரம் சேர்த்து மூலைகளில் வைக்கவும். அவை இதன் வாசனையால் வீட்டை விட்டு ஓடி விடும். போரிங் பவுடரை பேஸ்ட் செய்து சிறு உருண்டைகளாக உருட்டி கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் வைத்து விடுங்கள். வேப்ப மரத்தின் இலைகளை பேஸ்ட் செய்து மூலைகளில் வைத்தாலும் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்
