தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை முன்னெடுத்துள்ளது. அதாவது இனி வீடு அல்லது மனை வாங்க விரும்புவோர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் மாநில அரசின் திட்டங்கள் இணைந்து ஏழை மக்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வழங்கி வருகின்றன.
இந்தத் திட்டத்தில் 90% தொகையை அரசு ஏற்கும் நிலையில் மீதமுள்ள 10 சதவீதம் தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். இந்தப் பத்து சதவீதம் தொகையை செலுத்தக் கூட சிரமப்படும் ஏழை மக்களுக்காக தமிழக அரசு அண்மையில் 76 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. இதன் மூலமாக பயனாளிகள் கடன் வாங்காமல் சொந்த வீட்டை பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. வீடு அல்லது மனை வாங்க விரும்புபவர்கள் இதுவரை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்தது.
இந்த சிரமத்தை குறைப்பதற்காக தற்போது பிரத்தியாக இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி https://prpertysales.tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த டிஜிட்டல் முறை மூலம் இடைத்தரகர்கள் நடமாட்டம் தவிர்க்கப்படும் எனவும் பொதுமக்கள் எளிய முறையில் வெளிப்படையான முறையில் வீடுகளை பெற முடியும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
