அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் நேரடி சவால் விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்குத் தனது ஸ்டிக்கர்களை ஒட்டுவதையே முதல்வர் ஸ்டாலின் வேலையாகக் கொண்டுள்ளார் என்றும், மக்கள் நலத் திட்டங்கள் குறித்துக் கேள்வி எழுப்ப அவருக்குத் தகுதியே இல்லை என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், தனது ஆட்சிக் காலம் குறித்தும், தற்போதைய திமுக ஆட்சிக் காலம் குறித்தும் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். “அதிமுக ஆட்சி குறித்த உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கத் தயார். அதேபோல் திமுக ஆட்சி குறித்த எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் தருவீர்களா?” என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘OPEN CHALLENGE IS STILL ON’ என்று பதிவிட்டுள்ளார்.
