விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி… பிஎம் கிசான் நிதி ரூ.3,000 ஆக உயர்வு..? போடு ரகிட ரகிட…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love
மத்திய அரசு பிஎம் கிசான்  திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிதி உதவியை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தவணைத் தொகையை ரூ.3,000 ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.9,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய அமைப்புகளின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, இந்த நிதி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 2025 பிப்ரவரி மாத மத்திய பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சாகுபடிச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அரசின் இந்த உத்தேச முடிவு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.