விஜய்யும், நானும் பிறக்கும்போது… அண்ணன் திருமா தான் பிரசவம் பார்த்தாரு… சரியான பதிலடி கொடுத்த சீமான்..!!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் மதவெறி அரசியல் முன்னெடுக்கப்படுவதாகக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் கடந்த 22-ஆம் தேதி மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மேடையில் உரையாற்றிய திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகிய இருவரையும் பாஜகவின் ‘பிள்ளைகள்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

திருமாவளவனின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள சீமான், “விஜயையும் என்னையும் பாஜக பெற்றெடுக்கும்போது, திருமாவளவன் தான் பக்கத்தில் இருந்து பிரசவம் பார்த்தாரா?” என்று நக்கலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்க்கும் எனக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், திருமாவளவனின் இத்தகைய அரசியல் விமர்சனத்தைத் தன் பாணியில் வன்மையாகக் கண்டித்துள்ளார்.