போடு ரகிட ரகிட… இனி ஃபாஸ்டாக்கை இதற்கெல்லாம் பயன்படுத்தலாம்… மத்திய அரசு புதிய அதிரடி…!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

சுங்கச்சாவடிகளில் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கும் FasTag எனை பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கு உதவும். இதனால் ரொக்க பணம் அல்லது கிரிடிட் கார்டு டெபிட் கார்டு தேவை என்பது இருக்காது. பணம் செலுத்தக்கூடிய செயல்முறையும் வேகமாகவும். மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் போது பாஸ்டாக் மூலமாகவே கட்டணம் செலுத்திக்கொள்ள முடியும். இது மின்சார வாகன பயனர்களுக்கு பணப்பரிவத்தனையை எளிமையாக்கும். நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகம் தங்கும் விடுதிகளில் பாஸ்டாக் மூலமாக பணம் செலுத்திக் கொள்ளலாம்.

இதனால் பயணத்தின் போது பணம் செலுத்தும் சிரமங்கள் குறையும். வாகனங்களின் சர்வீஸ் மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களையும் இதன் மூலம் செலுத்த முடியும். சில நகரங்களில் நகரத்திற்குள் நுழையும் போது விதிக்கப்படும் கட்டணங்களும் பாஸ்டாக் மூலம் தானாகவே பணம் எடுக்கப்படும். இது போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றது.

   

இதன் மூலமாக பாஸ்டாக்கை இனி டோல் வரிக்கு மட்டும் பயன்படுத்தாமல் பல டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தும் முயற்சியில் தற்போது மத்திய அரசு களமிறங்கியுள்ளது. அந்த ஆறு மாதங்களாக நடந்து வந்த சோத வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் பார்க்கிங், பெட்ரோல், மின்சார வாகன சார்ஜிங் மற்றும் பிற பயண சேவைகளுக்கும் பாஸ்டாக் மூலமாக பணம் செலுத்திக் கொள்ள முடியும். இந்த வசதி நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.