தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, எங்கள் கட்சிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க உறுதிகளைத்தால் மட்டுமே கூட்டணி தொடர்பாக அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம் என்ற திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த பிறகு தேமுதிக வலுப்படுத்த பிரேமலதா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
நாடாளுமன்றத்தில் கட்சியின் குரலை ஒலிக்க செய்ய ஒரு ராஜ்ய சபா சீட் என்பது தேமுதிகவிற்கு நீண்ட கால தேவையாக இருந்து வருகின்றது. கடந்த காலங்களில் ஒரு சில கூட்டணிகளில் இதற்கான வாக்குறுதி அளிக்கப்படும் அது நிறைவேற்றப்படவில்லை. தேமுதிகவின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம், கௌரவமான இடங்கள் மற்றும் ராஜ்ய சபா சீட்டு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தேர்தல் கூட்டணி அமையும் என்று பிரேமலதா பேசியுள்ளது தற்போது தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளுக்கு ஒரு பெரும் சவாலாக மாறி உள்ளது.
இதனிடையே திமுக தரப்பிலிருந்து தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அப்போது தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று கூறப்பட்டதாகவும், அத்துடன் மரியாதையான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் திமுக தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
