அடுத்த பரபரப்பு… 2026 கூட்டணி முடிவு… தொகுதியை அறிவித்தார் டிடிவி தினகரன்….!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதன்படி NDA கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கூறி வருகிறார்கள் . தற்போது அவர்கள் இருவருமே பாஜகவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் நிலையில் கூட்டணி குறித்து அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.

இந்நிலையில் NDA கூட்டணியிலிருந்து வெளியே வந்த டிடிவி தினகரன் இதுவரை யாருடன் கூட்டணி என அறிவிக்கவில்லை. இதனிடையே கூட்டணி குறித்து ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பு அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது, நான் ஆண்டிபட்டி தொகுதியில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கூட்டணியில் சீட் கிடைக்கவில்லை என்றால் தனியாக நிற்பேன் எனவும் கூறியுள்ளார்.