தாயகட்டை, பல்லாங்குழி, சீட்டு ஆடுவது தான் 100 நாள் வேலையில் நடந்து கொண்டிருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முதலில் பயன்படுத்தியது நாம் தான். கொடி கூட வேற வண்ணத்துல அமைக்க முடியுமா, நம்மளோட சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தை தான் விஜய் பயன்படுத்தியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த வருடம் எங்கே போனீங்க? முருகன் மேல இப்ப மட்டும் ஏன் பாசம் வருகிறது? தேர்தலுக்கு முன்பாக இதைக் கொண்டு வருவது ஏன்? தீக்குச்சி யார் விளக்கு ஏற்றலாம், வீட்டையும் எரிக்கலாம்.
நீங்கள் வீட்டை கொடுத்த வருகிறீர்கள், விளக்கு ஏற்ற வரவில்லை, இரண்டு தரப்பையும் அனைத்து பேசியிருந்தால் அரை மணி நேரத்தில் இந்த பிரச்சனை தெரிந்திருக்கும். 100 நாள் வேலைத்திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை. தாயக்கட்டை, பல்லாங்குழி, சீட்டு ஆடுவது, கிழித்தட்டு ஆடுவது தான் 100 நாள் வேலையில் நடந்து கொண்டிருக்கிறது. 100 நாள் வேலையில் தூர்வாரிய குளங்கள் எத்தனை? போடப்பட்ட சாலைகள் எவ்வளவு? உழைக்காமல் இருப்பதும் ஒருவகை திருட்டு தான் என சொன்ன காந்தியின் பெயரை அவமதிப்பதாகத்தான் இந்த திட்டம் உள்ளது. ஜனநாயகத்தில் வாக்குரிமை தான் கடைசி வாய்ப்பு. அதற்கும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று சீமான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
