234 தொகுதிகள்… முடிஞ்சா 10 வேட்பாளர்கள் பெயரை சொல்ல சொல்லுங்க?… விஜய்க்கு பகிரங்கமாக சவால் விட்ட நயினார்…!

By Nanthini on மார்கழி 25, 2025

Spread the love

234 தொகுதிகள் உள்ள நிலையில் 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜய்யால் சொல்ல முடியுமா என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவையே நாளை பிடித்து விடுவேன் என்று கூட விஜய் சொல்லலாம். விஜய் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது சினிமா அல்ல. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும். வேட்பாளர்கள் போட வேண்டும். போடக்கூடிய வேட்பாளர் விலை போகாமல் இருக்க வேண்டும். அவர்களுடைய பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும். பூத் பொறுப்பாளர்கள் இல்லை. கட்டமைப்பு கிடையாது.

யார் வேட்பாளர் என்று அவர்கள் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. 234 தொகுதிகள் உள்ளது. வரிசையாக 10 அல்லது 15 பேர் பெயரை விஜய்யால் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். நான் குறை சொல்லவில்லை. அவரவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கும். நான் இல்லை என்று மறுக்க மாட்டேன். பாஜக என்பது மிகப் பெரிய கட்சி. 222 பார்லிமென்ட் எம்பிக்கள் உள்ளோம். மூன்று முறை முதல்வராக இருந்தவர் மூன்றாவது முறை பிரதமராக இருந்து மிகப்பெரிய சக்தியாக மோடியின் புகழும் பெருமையும் தமிழகத்தில் சினிமா நடிகராக இருக்கும் விஜய்க்கு எங்கே இருக்கிறது? சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்