விஜய் ஒரு சங்கி.. ரூ.2 லட்சம் கோடியை சுருட்ட வந்திருக்காரு… பரபரப்பை கிளப்பிய கருணாஸ்..!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ்முன்வைத்துள்ள கடுமையான விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.அதாவது, சினிமாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதை விட, அரசியலுக்கு வந்தால் 2 லட்சம் கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற கணக்கில்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.

விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகளைக் குறிப்பிட்டு, அவர் ஒரு “சங்கி” (பாஜகவின் ஆதரவாளர்) என்பது போல கருணாஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். விஜய் எந்த மாதிரியான உள்நோக்கத்துடன் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை மக்கள் சிந்தித்துத் தெளிவடைய வேண்டும் . மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாகக் களத்திற்கு வந்து போராடுபவரே உண்மையான தலைவன் என்றும், பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிபவர்கள் ஒருபோதும் தலைவராக முடியாது என்றும் அவர் விஜய்யைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.