தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கவின் ஆணவக் கொலை விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மௌனம் காப்பது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதில், கவின் என்ற இளைஞர் சாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காகக் கொல்லப்பட்ட நிலையில், பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய் இது குறித்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்று எழுப்பியுள்ளார்.
மேலும் ஆணவக் கொலை போன்ற சமூக அவலங்கள் குறித்துப் பேசாமல் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் விஜய் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியே ஆக வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
