தாயை அந்த கோலத்தில் கள்ளகாதலனோடு பார்த்த 14 வயது மகன்… அடித்தே கொன்று இரவு முழுவதும் சடலத்துடன்… கொலை நடுங்க வைத்த சம்பவம்…!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில், தாயின் நடத்தையில் ஆத்திரமடைந்த மைனர் மகன், அவரை அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.  செவ்வாய்க்கிழமை இரவு, தனது தாய் பூரா என்பவருடன் நெருக்கமாக இருந்ததைக் கண்ட 14 வயது  சிறுவன் ஆத்திரமடைந்துள்ளார். கோபத்தின் உச்சியில், ஒரு குச்சியால் தனது தாயின் தலையில் பலமுறை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தாயைக் கொலை செய்த பிறகு, இரவு முழுவதும் சடலத்துடனேயே அந்தச் சிறுவன் வீட்டில் இருந்துள்ளார்.

மறுநாள் காலையில் போலீசாருக்குத் தகவல் கொடுத்த அவர், தனது தாயைக் காதலன் பூராதான் அடித்துக் கொன்றதாகக் கூறி பழியை அவர் மீது சுமத்தினார். சந்தேகமடைந்த போலீசார், பூராவைக் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் நடந்த உண்மைகளை விவரித்தார். தீவிர விசாரணையில், தனது தாயின் காதலனைக் கொலை வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்ட அந்த மைனர் சிறுவனே கொலையாளி என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.