பிறப்பு சான்றிதழ் அனைவருக்குமே கட்டாயம் தேவைப்படும் ஒரு அரசு ஆவணமாகும்.. . ஸ்கூலில் குழந்தைகளை சேர்ப்பது முதல் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, அரசு உதவி திட்டங்கள் பெறுவது உட்பட எதுவாக இருந்தாலும் சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.. அந்த ஆவணங்களில் மிக மிக முக்கியமான ஆவணமாக இருப்பது இந்த பிறப்புச் சான்றிதழ்தான்..
இந்நிலையில் தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழை இணையதளம் மூலமாக பெறுவதில் இருந்து விலக்கு அளித்த தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி மண்டல துணை தாசில்தார்கள் மற்றும் தாலுகா துணை தாசில்தார்கள் கையால் கையெழுத்திட்டு சான்றிதழ்களை வழங்கலாம் என்று புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25 இன்று முதல் அடுத்த ஜனவரி 25ஆம் தேதி வரை இளைய தலை மூலம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
