ரசிகர்கள் கொண்டாடும் தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? – காரணத்தை கேட்டு அப்செட் ஆன ரசிகர்கள்!

By Elango on மார்கழி 25, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் சில படங்களை கொண்டாடுகின்றனர். நல்ல வசூலும் கிடைக்கிறது. ஆனால் குறிப்பிட்ட அந்த படங்களுக்கு தேசிய விருது கிடைப்பது இல்லை. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர்வி உதயகுமார் கூறியதாவது, ரசிகர்கள் கொண்டாடும் படங்களை தேசிய விருதுக்கு ஆண்டுதோறும் அனுப்புவதில்லை. அதுதான் அந்த படங்கள் விருது பெறுவதில்லை.

தேசிய விருதுக்கு அவர்கள் அறிவிக்கும் தேதிக்குள் படத்தை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அதை செய்வதில்லை. தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும்பிரச்னையா, இயக்குனருக்கும் நடிகருக்கும் பிரச்னையா இதில் யாருடைய தப்பு என்று தெரியாது. படம் பெரிய வசூல் செய்ததே போதும் என்று விட்டு விடுகிறார்கள். அதனால் தேசிய விருதுக்கு படத்தை அனுப்பாமல் விடுவதால் எதிர்பார்த்த தமிழ் படங்களுக்கு விருது கிடைப்பது இல்லை என்று ஆர்வி உதயகுமார் கூறியிருக்கிறார்.