ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு….! 22,000 காலிப்பணியிடங்கள்…. 10-வது முடித்திருந்தால் போதும்…. உடனே அப்ளை பண்ணுங்க…!

By Devi Ramu on மார்கழி 24, 2025

Spread the love

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள சுமார் 22,000 ‘குரூப்-டி’ பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட சில வேலைகளுக்கு ஐ.டி.ஐ (ITI) முடித்திருக்க வேண்டும்.

18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு. ஆரம்பக்கட்ட ஊதியமாக ரூ. 18,000 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியான நபர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

   

தமிழகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் வரும் 2026, ஜனவரி 21 முதல் பிப்ரவரி 20 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ. 500-ம், பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ. 250-ம் வசூலிக்கப்படுகிறது.

   

இதற்கான விண்ணப்பங்களை ரயில்வே தேர்வு வாரியத்தின் சென்னை மண்டல அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbchennai.gov.in மூலம் பதிவு செய்யலாம். 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக உடற்திறன் சோதனைகள் நடத்தப்படும். மத்திய அரசுப் பணியில் சேர நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.