அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு….! தண்ணீர் அதிகம் குடிப்பது ஆபத்தானதா….? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க…!!

By Devi Ramu on மார்கழி 24, 2025

Spread the love

நமது உடலின் இயக்கத்திற்குத் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது என்றாலும், அனைவருக்கும் ஒரே அளவிலான தண்ணீர் தேவைப்படுவதில்லை. ஒரு மனிதரின் நீர்ச்சத்து தேவையானது அவரது உடல் அமைப்பு, அன்றாட உழைப்பு மற்றும் வசிக்கும் இடத்தின் தட்பவெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

பொதுவாக, ஆண்களுக்குத் தினசரி 3.7 லிட்டரும், பெண்களுக்கு 2.7 லிட்டரும் திரவ உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலமாகவே 20% நீர்ச்சத்து உடலுக்குக் கிடைத்துவிடுகிறது.

   

தாகம் எடுக்கும் அளவு மற்றும் சிறுநீரின் நிறம் ஆகியவற்றை வைத்தே உங்கள் உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்கிறதா என்பதை அறியலாம். ஒரு நாளில் இத்தனை லிட்டர் குடிக்க வேண்டும் என்று கட்டாய இலக்குகளை நிர்ணயிப்பதை விட, உடல் கேட்கும் போது தண்ணீர் குடிப்பதே சிறந்தது.

   

அதே சமயம், அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பது இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உங்கள் உடலின் தேவையறிந்து முறையான அளவில் தண்ணீர் பருகுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு வழியாகும்.