வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டாப்ஸி. இந்தியில் இப்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் பேசியபோது பட வாய்ப்புகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அப்போது நடிகை டாப்ஸி கூறியதாவது, சினிமாவுக்கு நான் நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் என்னுடைய தலையில் சுருள் முடியை நேராக மாற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்கள். ஆனால் இந்த கண்டிஷன் எனக்கு பிடிக்காததால் பல படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போனது என்று கூறியிருக்கிறார். இதையடுத்து சுருள் முடியை பறக்க விட்டபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, என் சுருள்முடி என் கிரீடம் என்ற கேப்ஷனுடன் இணையத்தில் அந்த போட்டோவை டாப்ஸி பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
