பரபரப்பு..! EPS என்ற பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது… ஓபிஎஸ் ஆவேசம்..!

By Soundarya on மார்கழி 24, 2025

Spread the love

எடப்பாடி பழனிசாமியின் (EPS) பெயரைச் சொல்வதற்கே தாம் வெட்கப்படுவதாக ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். இபிஎஸ் கட்சியில் இருக்கும் வரை மீண்டும் அதிமுகவில் இணையப் போவதில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இபிஎஸ் தலைமையில் சந்தித்த 11 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளதாகவும், அவர் கட்சியை அதலபாதாளத்திற்குத் தள்ளிவிட்டதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” எனக் குறிப்பிட்ட அவர், விரைவில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் ஓபிஎஸ்-இன் இந்த ஆவேசமான பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.