VIDEO: என்கூட சண்டைக்கு வாறியா..? பத்திரிக்கையாளரோடு மல்லுக்கட்டிய பாபா ராமதேவ்… கடைசியில் நடந்தது என்ன..?

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஊடக நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியின் நெறியாளரான ஜெயதீப் கர்ணிக் (Jaideep Karnik), பாபா ராம்தேவை மல்யுத்தத்திற்கு வருமாறு சவால் விடுத்தார். ஜெயதீப் மல்யுத்தப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பாபா ராம்தேவ் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்.

போட்டியின் தொடக்கத்தில் பாபா ராம்தேவ் தனது பிடியை இறுக்க முயன்றாலும், ஜெயதீப் கர்ணிக் திடீரென அதிரடி காட்டி தற்காப்பு உத்திகளைப் பயன்படுத்தினார். இருவரும் தரையில் விழுந்தாலும், ஒரு விளையாட்டு உணர்வுடன் சிரித்தபடியே எழுந்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். டிசம்பர் 2025-இல் நடைபெற்ற இந்தச் சுவாரசியமான நிகழ்வின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.