இனி தங்கம் விலை உயர்ந்தாலும் வேஸ்ட் தான்… நகைக்கடனில் கைவைத்த RBI… இப்படி பண்ணிடீங்களே பாஸ்!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

தங்கத்தின் விலை தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்வதும், பின் திடீரெனச் சரிவதுமாக ஊசலாட்டத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களின் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கைவசம் உள்ள நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்குகின்றனர். 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.10 லட்சம் கோடியாக இருந்த நகைக்கடன் அளவு, அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் 3.37 லட்சம் கோடியாகப் பிரம்மாண்டமாக அதிகரித்துள்ளது. இதில் 40 முதல் 45 சதவீத கடனை 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே வாங்கியுள்ளனர்.

தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும்போது, வாடிக்கையாளர்கள் வாங்கிய கடன் தொகையானது அடகு வைக்கப்பட்ட நகையின் மதிப்பை விட அதிகமாகிவிடுகிறது. இத்தகைய சூழலில், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நகையைத் திருப்பாமல் அப்படியே விட்டுவிடும் போக்கும் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நகைக்கடன் வழங்குவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்தியுள்ளது. தற்போது நகையின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலங்களில் அதன் மதிப்பை 60 முதல் 65 சதவீதம் வரை மட்டுமே வழங்க வங்கிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன