பாமக-வில் தொடரும் மோதல்: “யாருக்கும் உரிமை அல்ல” – அன்புமணி பரபரப்பு அறிக்கை…!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love
ராமதாஸ் ஆதரவு தரப்பு, வரும் டிசம்பர் 29-ம் தேதி சேலத்தில் பாமக-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாமக-வின் பொதுக்குழுவைக் கூட்டவும், நடத்தவும் அன்புமணியைத் தவிர வேறு யாருக்கும் சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை.சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் கட்சியின் அதிகாரப்பூர்வமான பொதுக்குழு அல்ல. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் அல்லது தீர்மானமும் பாட்டாளி மக்கள் கட்சியை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. கட்சியின் தலைமை மற்றும் அதிகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே நிலவும் இந்த மோதல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.