2026 புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு ‘குபேர யோகம்’…! முதல் நாளே கொட்டப்போகும் பணமழை… அதிர்ஷ்ட ஜாக்பாட் யாருக்கு…?

By Devi Ramu on மார்கழி 23, 2025

Spread the love

2026-ம் ஆண்டு பிறக்கும் போதே சதுர்கிரஹி, புத்தாதித்ய யோகம் மற்றும் சிவபெருமானின் அருளைத் தரும் பிரதோஷம் எனப் பல்வேறு மங்களகரமான நிகழ்வுகளுடன் தொடங்குகிறது. இதனால் மேஷம், கன்னி மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிகளுக்குப் புத்தாண்டு முதல் நாளிலேயே அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது.

மேஷம்:

   

மேஷ ராசியினருக்குத் தொழில் முதலீடுகளில் இரட்டிப்பு லாபமும், கடன் தொல்லைகளிலிருந்து விடுதலையும் கிடைக்கும். வாகனம் அல்லது புதிய சொத்துக்கள் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது.

   

கன்னி:

 

கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் மனக்கவலைகள் நீங்கி, சுப காரியங்கள் கைகூடும்; குறிப்பாகக் குழந்தை வரம் வேண்டுவோருக்கு நல்ல செய்தி தேடி வரும்.

மகரம்:

மகர ராசியினருக்குத் திருமணத் தடைகள் விலகி, பெற்றோரின் சம்மதத்துடன் காதல் கைகூடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலை தேடும் இளைஞர்களுக்குப் புத்தாண்டு முதல் நாளிலேயே நல்ல நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த மூன்று ராசிகளுக்கும் 2026-ம் ஆண்டு நிதி நெருக்கடிகள் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக மலரப்போகிறது.