லெஸ்பியன் ரோலில் அந்த நடிகையுடன் நடிக்க ஆசை – அய்யய்யோ… தனுஷ் பட நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா? – முகம் சுளித்த ரசிகர்கள்!

By Elango on மார்கழி 22, 2025

Spread the love

தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக 1 – நேனோகாடினே என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை கிருத்தி சனோன். இந்த படம் கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து தில்வாலே என்ற பாலிவுட் படத்தில் நடித்த கிருத்தி சனோன் முன்னணி நட்சத்திர நடிகையாக மாறினார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த இந்தி படம் தேரே இஸ்க் மே படத்தில் கதாநாயகியாக கிருத்தி சனோன் நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ரூ. 170 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் கிருத்தி சனோன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த நேர்காணல் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில், ஒரு படத்தில் லெஸ்பியன் ரோலில் நடித்தால் எந்த நடிகைக்கு ஜோடியாக நடிப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கிருத்தி சனோன் கூறுகையில், தீபிகா படுகோனாவுடன் நடிப்பேன். ஏனென்றால் அவர் அழகாக இருப்பார். என்னை சரியாக வழி நடத்துவார். இருவரும் ஒரே உயரம். உடல் அமைப்பும் ஒன்றுதான் என்று வெளிப்படையாக கிருத்தி சனோன் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.