நடப்பு ஆண்டு 2025ல் பல முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகின. இதில் அந்தப் படங்களின் ரிலீஸ்க்கு முன்பாக டிரெய்லர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதில் அதிக பார்வைகளை பெறற டிரெய்லர்கள் உச்சநட்சத்திரங்கள் நடித்த படங்களின் ட்ரெய்லர்களாக தான் உள்ளன. அந்த வகையில் நடிகர் அஜீத் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் டிரெய்லர் யூடியூப்பில் 3.9 கோடி பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் அசத்தியுள்ளது.
அடுத்து நடிகர் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் டிரெய்லர் 3.5 கோடி பார்வைகளை பெற்று 2ம் இடமும், நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் டிரெய்லர் 2.8 கோடி பார்வைகளை பெற்று 3ம் இடத்திலும் உள்ளது. நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படம் டிரெய்லர் 2.4 கோடி பார்வையில் 4ம் இடம், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் 2.1 பார்வைகள் பெறறு 5ம் இடத்தையும் பிடித்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
