தவெக வில் இருக்கும் யாருமே விஜய்க்கு உண்மையாக இல்லை – இயக்குனர் அமீர் சொன்ன பகீர் தகவல்!

By Elango on மார்கழி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் அமீர். தவெக குறித்தும் விஜய் குறித்தும் இயக்குனர் அமீர் விமர்சனம் செய்து சமீபத்தில் பேசியிருக்கிறார். அப்போது இயக்குனர் அமீர் கூறியிருப்பதாவது, தவெக கட்சியில் விஜயுடன் இன்று இருப்பவர்கள் யாரும் அவருக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். இதை தான் கடந்த கால அரசியல் வரலாறு சொல்கிறது. அதனால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு தனது தந்தையை அவர் அருகில் வைத்துக் கொண்டால் அது நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.

ஏனென்றால் எந்த தகப்பனும் தன் மகன் கெட்டுப் போக வேண்டும், நாசமாக போக வேண்டும் என்று நினைக்க மாட்டார் என்று இயக்குனர் அமீர் அதில் கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக விஜய் தன் தந்தையுடன் பேசாமல் இருந்தார். மேலும் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கு இதுவரை தவெக கட்சியில் எந்த பொறுப்பும் கட்சியின் தலைவர் விஜய் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.