இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டாப்ஸி. தொடர்ந்து வந்தான் வென்றான் காஞ்சனா 2 ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்தார். இப்போது இந்தி சினிமாவில் அதிகமாக டாப்ஸி நடித்து வருகிறார். அவருக்கு கடந்த ஆண்டு மதியாஸ்போ என்ற பாட்மிண்டன் வீரருடன் திருமணம் நடந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை டாப்ஸி கூறியதாவது, எனக்கு தலையில் சுருள்முடியாக இருக்கும். அதனால் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல சிக்கல்களை சந்தித்தேன். முடி நேராக இருந்தால் தான் கிளாமராக இருக்கும் என எல்லா இயக்குனர்களும் நம்புகிறார்கள். அதனால் என்னை பார்த்ததும் இயக்குனர்கள், என்னுடைய முடியை ஸ்ட்ரைட் ஆக்க வேண்டும் என்று அடிக்கடி கேட்பார்கள்.
சுருள் முடி எப்போதும் கலகம் ஏற்படுத்தும் ரோலுக்கு தான் செட்டாகும். நல்ல பெண் ரோலுக்கு செட்டாகாது என்று சொல்வார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்பதால் இயக்குனர் சொல்வதை ஏற்று முடியை ஸ்ட்ரைட்டன் ஆக்கி விடுவேன். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரத்தில் நடிக்கும் போது கூட அதைத்தான் இயக்குனர்கள் என்னிடம் சொல்வார்கள் என்று நடிகை டாப்ஸி அப்போது கூறியிருக்கிறார்.
