என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…! திருமணமான 10 நிமிடத்தில் ஷாக் கொடுத்த மணப்பெண்… அப்படி என்ன செய்தார் தெரியுமா…? விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 22, 2025

Spread the love

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மெகுல் மற்றும் கௌரி அகர்வால் ஆகிய சகோதரிகள் ‘கோயல்’ (Goyel) எனும் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கௌரி அகர்வாலுக்குத் திருமணம் நடந்த நிலையில், தாலி கட்டிய அடுத்த 10 நிமிடங்களிலேயே அவர் மணக்கோலத்துடன் மடிக்கணினியில் (Laptop) வேலை பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட மிக முக்கியமான தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யவே அவர் அவ்வாறு செய்ததாக அவரது சகோதரி சமூக வலைத்தளத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

   

இந்தச் செயல் இணையவாசிகள் இடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர் அவரது அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பாராட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இது நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது என விமர்சித்து வருகின்றனர். திருமண நாளன்று கூட வேலையில் மூழ்கியிருப்பது ‘ஒொர்க்-லைப் பேலன்ஸ்’இல்லாததைக் குறிப்பதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

   

உழைப்பின் உயர்வுக்காக இந்தப் படம் பகிரப்பட்டாலும், இது ஒரு விளம்பர உத்தி எனச் சிலரும், குடும்பத் தருணங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.