ஜோதிடர் சாஸ்திரத்தின் படி கிரக நிலைகள் ஒருவருடைய ராசியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. அனைவருமே 2025 ஆம் ஆண்டில் கிரகங்கள் மாற்றத்தால் பல இன்ப துன்பங்களை கடந்து வந்திருப்போம். தற்போது இந்த ஆண்டின் இறுதி மாதத்திற்கு வந்து விட்டோம். பொதுவாக வருடம் தொடங்கும் போது அன்றைய வருடம் எப்படி இருக்கும் என்று தனது ராசி பலனை வைத்து தெரிந்து கொள்வதில் அனைவருமே ஆர்வம் காட்டுவார்கள்.
அதன்படி சனி உடைய நிலையும் வருட இறுதியில் நடக்கக்கூடிய ராகு கேது பெயர்ச்சியும் 12 வருடங்களுக்குப் பிறகு குரு பகவான் கடக ராசியில் ஜூன் 2 ஆம் தேதி பெயர்ச்சியாக கூடிய இந்த நிலையும் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை தர போகின்றது. 2026 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின் பிரகாரம் குபேர யோகத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்:
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு பல்வேறு வகையில் சாதக பலன்களை கொடுக்கப் போகிறது. இவர்களின் நீண்ட நாள் கனவுகள் நிஜமாகும். அதுமட்டுமல்லாமல் கிரகங்களின் மாற்றமானது இவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல ஏற்றத்தை கொடுக்கும் என்பதால் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைகளுக்கு 2026 ஆம் ஆண்டு நல்ல முடிவு இருக்கும். செல்வ செழிப்பான வாழ்க்கையை இந்த ஆண்டு நீங்கள் அனுபவிக்கப் போகிறீர்கள்.
கன்னி:
இந்த ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டிலிருந்து தான் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆரம்பிக்க போகின்றது என சொல்லும் அளவுக்கு புரிய மாற்றங்கள் நடக்கும். இந்த 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்கள் நிச்சயம் குடும்பத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தை சந்திக்கப் போகிறார்கள். குபேர யோகத்தால் பொருளாதாரத்தில் உச்சம் அடைவார்கள். இவர்களுக்கு மனதில் இப்போதுதான் ஓரளவு நிம்மதி ஏற்படும். இந்த குபேர யோகம் இவர்களுக்கு திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான ஆரம்பமாக அமையும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு நிச்சயம் இந்த 2026 ஆம் ஆண்டு ஒரு அதிர்ஷ்டத்தை கொண்டு வரப் போகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக போராடி வந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். இந்த ஆண்டில் குபேர யோகத்தால் வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பணியாற்றும் இடத்தில் ஊதியமும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த ஆண்டு இவர்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
துலாம்:
கடந்த காலங்களில் தீராத துன்பங்களை அனுபவித்து வந்த துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஒரு மகிழ்ச்சியான அத்தியாயமாக அமையப்போகின்றது. கடந்த காலங்களில் எதை எடுத்துக் கொண்டாலும் இவர்களுக்கு துன்பம் மட்டுமே இருந்து வந்தது. அதன்படி இந்த 2026 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு குபேர யோகமானது பொருளாதாரத்தில் உச்ச பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகளை எந்த ஆண்டு நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கூடி வரும். அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். பணவரவு எதிர்பார்ப்புக்கு மேலாகவே இருக்கும்.
