இரவோடு இரவாக அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்… காலையிலேயே ஸ்டாலின், விஜய்க்கு ஷாக் கொடுத்த இபிஎஸ்…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

அதிமுகவின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் போர் கொடி தூக்கியதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்தார். விஜயும் அவரை அரவணைத்து அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்கு மறுபக்கம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார். 2026 தேர்தலை முன்னிட்டு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

   

அந்த வகையில் திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 170க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கட்சித் துண்டு போர்த்தி வரவேற்ற ஈபிஎஸ் தேர்தல் களத்தில் பம்பரம் போல சுழன்று செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.