நிச்சயிக்கப்பட்ட திருமண ஏற்பாடுகளின் போது பெண் மருத்துவர் ஒருவர் எதிர்கொண்ட பிற்போக்குத்தனமான சவால்கள் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள பெண், ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணராக (Cardiothoracic Surgeon) பணிபுரியும் அளவிற்கு உயரிய கல்வித் தகுதியைப் பெற்றவர். இருப்பினும், திருமணப் பேச்சுவார்த்தையின் போது அவரது கல்வித் தகுதியை விட வீட்டு வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மணமகன் வீட்டார், தங்கள் மகனுக்கு வீட்டு வேலைகள் அல்லது சமையல் பற்றி எதுவுமே தெரியாது என்று வெளிப்படையாகக் கூறிவிட்டு, அந்தப் பெண் மருத்துவரிடம், “எதிர்காலத்தில் தினமும் 30 பேருக்குச் சமைக்க முடியுமா?” என்று கேட்டுள்ளனர். ஒரு பெண் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும், அவரிடமிருந்து அடிப்படை வீட்டு வேலைகளையே சமூகம் அதிகம் எதிர்பார்க்கிறது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
View this post on Instagram
மூன்றாவது வரனில், வருங்கால மணமகன் அந்தப் பெண்ணின் உடலில் உள்ள பச்சை குத்தலை (Tattoo) நீக்கினால் மட்டுமே திருமணத்திற்குச் சம்மதிப்பதாக நிபந்தனை விதித்துள்ளார். அந்தப் பெண் இது போன்ற மூன்று விதமான கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டதாக அவரது தோழி வீடியோவில் பகிர்ந்துள்ளார். பெண்களின் தொழில்முறை சாதனைகளை மதிக்காமல், வீட்டுப் பொறுப்புகளை மட்டும் அவர்கள் மீது சுமத்தும் இத்தகைய போக்கு குறித்து இணையவாசிகள் பலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்
