உலகிலேயே மிகக் கொடிய விஷ உயிரி…. சயனைடை விட 1000 மடங்கு அதிகம்… அறியாமல் கையில் எடுத்த சுற்றுலா பயணி…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on மார்கழி 21, 2025

Spread the love

பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்ற ஒரு வெளிநாட்டவர், கடலில் அழகாகத் தெரிந்த ஒரு சிறிய வகை ஆக்டோபஸைக் கையில் எடுத்து விளையாடிய வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காண்பதற்குச் சாதுவாகத் தெரிந்த அந்த உயிரினம், உண்மையில் உலகிலேயே மிகக் கொடிய விஷம் கொண்ட ‘ப்ளூ-ரிங்ட் ஆக்டோபஸ்’ (Blue-ringed Octopus) ஆகும்.

இதன் உடலில் உள்ள விஷம், கொடிய சைனைடை விட ஆயிரம் மடங்கு அதிக வீரியம் கொண்டது. இது கடித்தால் உடலில் வலியே தெரியாது என்பதால், கடிக்கப்பட்ட நபர் தான் ஆபத்தில் இருப்பதை உணர்வதற்குள்ளேயே சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும்.

   

அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த ஆக்டோபஸின் விஷத்திற்கு இன்றுவரை உலகில் மாற்று மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை. ஆபத்தை உணராமல் அந்தச் சுற்றுலாப் பயணி அதனைத் தொட்டு விளையாடியதைக் கண்டு கடல் உயிரியல் வல்லுநர்கள் அலறியுள்ளனர்.

   

 

View this post on Instagram

 

A post shared by Andy McConnell (@decanterman)

இந்த உயிரினம் அச்சுறுத்தலை உணரும்போது மட்டுமே அதன் உடலில் நீல நிற வளையங்கள் பளிச்செனத் தோன்றும். அதுவே மரணத்திற்கான எச்சரிக்கையாகும். தான் மயிரிழையில் உயிர் தப்பியதை உணர்ந்த அந்தப் பயணி, அதன் விபரீதத்தை அறிந்ததும் பெரும் நடுக்கத்தில் உறைந்து போயுள்ளார்.