ரயிலுக்காக காத்திருந்த பெண்…! தரதரவென இழுத்து சென்று பலாத்காரம் செய்த ராணுவ வீரர்…. ரயிலில் நடந்த கொடூர சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 21, 2025

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தின் டட்டிசில்வாய் இரயில் நிலையத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவத்தினருக்கான சிறப்புப் பெட்டியில், 22 வயது மதிக்கத்தக்க பெண்ணை 42 வயதான அந்த வீரர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். இரயிலுக்காக காத்திருந்த அந்தப் பெண்ணை, குடிபோதையில் இருந்த அந்த ராணுவ வீரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின்  குரலைக் கேட்டு விரைந்து வந்த இரயில்வே காவல்துறையினர், அங்கிருந்து தப்பியோட முயன்ற குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடித்தனர். அந்தப் பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ராணுவ வீரர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஒரு வீரரே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.