10 வருஷமா இந்த கள்ள ஓட்டு கண்ணுக்கு தெரியலையா?… செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி….!

By Nanthini on மார்கழி 21, 2025

Spread the love

10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்கு தெரியவில்லையா என்று திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செந்தில் பாலாஜி, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் கூட எந்த ஆண்டு சேர்க்கப்பட்டவர்கள்? இதை முழுவதும் செய்வது தேர்தல் ஆணையம். வழிகாட்டு முறைகளை கொடுப்பதே தேர்தல் ஆணையம். மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்ன சொல்கின்றதோ அந்த பணியை அவர்கள் செய்கின்றனர். பத்து வருடங்கள் ஏற்கனவே அவர்களுடன் கூட்டணியில் இருந்து அதிமுக தான் ஆட்சியில் இருந்தது.

அப்போது இந்த பத்து வருடங்கள் இந்த கள்ள ஓட்டுகள் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? கூட்டணி ஆட்சி இருந்தபோது கண்ணுக்கு தெரியவில்லையா? இப்போது கூட்டணியில் தானே உள்ளார்கள்? அப்போது எல்லாம் நல்ல ஓட்டா இருந்தது. இப்போது கள்ள ஓட்டா இருக்கிறதா? பொதுவாக வாக்காளர் பட்டியல் ஒரு நேர்மையான வாக்காளர் பட்டியலாக இருந்தால் தகுதியுள்ள வாக்காளர் பட்டியலாக இருந்தால் தேர்தலை பொருத்தவரையில் தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இருக்கும். இந்த பட்டியலை பொருத்தவரையில் நீக்கப்பட்டவர்களையும் புதிதாக சேர்க்கப்பட்டவர்களையும் புதியதாக ஒரு முறை பார்க்க வேண்டும். பட்டியலை முழுவதும் பார்த்த பிறகே யாராவது தகுதி இல்லாமல் சேர்ந்து உள்ளார்களா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.