எறும்புகள் உள்ளே நுழையும் இடத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து விடுங்கள் அல்லது எலுமிச்சை தோலை போட்டு வையுங்கள். தரையை கழுவும் போதும் துடைக்கும் போதும் அந்த தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து பயன்படுத்தலாம். எந்த ஒரு கசப்பான புலிப்பான பொருளும் எறும்புகளை விரட்டி அடிக்கும்.
ஆரஞ்சு எலுமிச்சை பழத்தை போலவே எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஆரஞ்சு தோலை போட்டு அரைத்து பேஸ்ட் செய்து எறும்புகள் நுழையும் இடத்தில் தடவினால் எறும்புகள் அதை தாண்டி உள்ளே வராது. ஆரஞ்சு தோல் ஒரு இயற்கையான எறும்பு கொல்லியாக பயன்படுகிறது.
எறும்புகளுக்கு மிளகை கண்டால் பயம். எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழையும் இடங்களில் மிளகுத்தூளை தூங்குங்கள். இது எறும்புகளை விரட்டுவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
அடுத்ததாக எறும்புகள் இருக்கும் மூலை முடுக்குகளில் எல்லாம் உப்பை தெளிப்பதன் மூலமாக அதனை விரட்டி அடிக்கலாம். சாதாரணமான டேபிள் சால்ட் எனப்படும் தூள் உப்பு இதற்கு பயன்படுத்தலாம். நீரை நன்றாக கொதிக்க விட்டு அதில் நிறைய உப்பை சேர்த்து கரையும் வரை கலக்க வேண்டும். இதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொண்டு எறும்புகள் நுழையும் இடங்களில் தெளித்தால் எறும்புகள் வராது.
புதினா ஒரு இயற்கையான பூச்சி விரட்டியாக இருப்பதால் இவை எறும்புகளை விரட்டி விடும். புதினாவின் வாசனையை எறும்புகளால் தாங்கவே முடியாது. இதனால் அவற்றை உள்ளே நுழைய விடாமல் தடுக்கிறது. உலர்ந்த புதினா பொடியை எறும்புகள் வரும் இடத்தில் தூவினால் எறும்புகள் வராது.
