திடீர் திருப்பம்… ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல் காட்டிய விஜய்… விரைவில் தவெகவில் ஐக்கியம்… செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தற்போது தீவிர படுத்தியுள்ளன. கூட்டணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம், நலத்திட்ட பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று இருவரும் உறுதிப்பட கூறி வருகிறார்கள்.

அதே சமயம் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய ஓபிஎஸ் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. பாஜகவுடன் ஓபிஎஸ் நெருக்கமாக இருப்பதால்தான் அவரை கூட்டணியில் சேர்க்க விஜய் தயக்கம் காட்டுவதாக தமிழக வெற்றிக்கழகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஓபிஎஸ்ஐ தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர்க்க செங்கோட்டையன் விஜய்யிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக உடனான தொடர்பை ஓபிஎஸ் குறைத்தால் சேர்க்க தயாராக இருப்பதாக விஜய் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட காலமாக பாஜக ஆதரவில் இருந்த ஓபிஎஸ் அதை விலக்கி விஜயுடன் கைகோர்ப்பாரா என்பதை கேள்விக்குறியாக உள்ளது.