என்னை போலவே சினிமாவில் என் பேரனும் சாதிப்பார், பெரிய இசையமைப்பாளராக வருவார் – உறுதியாக பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி!

By Elango on மார்கழி 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் நடிப்பில் மட்டுமல்ல ஜோதிட கலையிலும் வல்லவர் என்பது பலரும் அறியாத விஷயம். இப்போது 90 வயதான நிலையில் வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவில் இருந்து விலகி முழுநேர ஓய்வில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, என்னுடைய மகன் மனோவின் மகன் அதாவது என்னுடைய பேரன் பெயர் மானஸ். என் மகன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அங்கு மானஸ் பிறந்து வளர்ந்து படித்து இப்போது 21 வயதாகிறது. நடிப்பு ஆர்வம் என் பேரனிடம் நிறைய உள்ளது. அதே போல் செஸ் போட்டியில் மானஸ் பல சாதனைகளை செய்து வருகிறான்.

   

எங்கள் குடும்பத்தில் எம் என்பது அதிர்ஷ்டமாக உள்ளது. மூர்த்தி என் பெயர். என் பையன் பெயர் மனோ. என் பேரன் பெயர் மானஸ். நான் இப்போது வசிக்கும் இடமும் எம் எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது. இசைத்துறையில் அவனுக்கு நிறைய ஆர்வம் உள்ளது. சரிகமபதநி உள்ளிட்ட பல இசை நிகழ்ச்சிகளில் என் பேரன் பாடியிருக்கிறார்.

   

என் பேரனின் ஜாதகத்தை பார்த்தேன். அவன் ஜாதகப்படி ஒரு பெரிய இசையமைப்பாளரின் ஜாதகத்தோடு ஒத்துப் போகிறது. எனவே மானஸ்சும் எதிர்காலத்தில் பெரிய இசையமைப்பாளராக வருவது உறுதி. என் பேரனுக்கு தமிழ் சினிமாவில் பெரிய பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. என்னை போலவே அவரும் பிரபலமாக இருப்பார் என்று நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருக்கிறார்.