தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு…. ரூ.3000 + ரூ.10,000 ஜாக்பாட்… வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரொக்கப்படும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகைப்புடன் தமிழக அரசு 3000 – 5000 ரூபாய் வழங்க திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க பீகார் பாணியில் மகளிர் சுய தொழிலுக்காக பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் என்று அறிவிப்பை வெளியிட NDA திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஜனவரி முதல் வாரத்தில் பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவர்களில் யாரேனும் ஒருவர் தமிழகத்தில் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில் அதில் இந்த அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.