மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்த பிதாமகன் பட நடிகை – இந்த முறை 2வது ரவுண்ட் வருவாரா என காத்திருக்கும் ரசிகர்கள்!

By Elango on மார்கழி 18, 2025

Spread the love

தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை சங்கீதா. கபடி கபடி பிதாமகன் உயிர் தனம் மன்மதன் அம்பு என தமிழில் பல படங்களில் நடித்த அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பும் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை சங்கீதா மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் அன்கில் என்ற படத்தில் அவர் இப்போது முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகனாக இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியான பிறகு நடிகை சங்கீதாவுக்கு தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.