Actor Silambarasan

யார் எதை சொன்னாலும் கேட்காதீங்க… ஆட்டு மந்தை மாதிரி பின்னாடியே போகாதீங்க – திடீரென ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த நடிகர் சிலம்பரசன்!

By Elango on மார்கழி 18, 2025

Spread the love

தக்லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிலம்பரசன் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

அப்போது நடிகர் சிலம்பரசன் கூறியதாவது, எவன் சொல்றதையும் கேட்டுக்கிட்டு ஆட்டுமந்தை மாதிரி பின்னாடி போகவே போகாதீங்க. நீங்க யாரையும் ஃபாலோ பண்ணனும்ன்னு அவசியமே இல்லே. சிலம்பரசன் படத்தை பார்த்தீங்கன்னா விசில் அடிச்சீங்க, ரசிச்சீங்க, சந்தோஷமா இருங்க. அதோட நிறுத்திக்குங்க. உங்க பேச்சை முதல்ல நீங்க கேளுங்கன்னு தான் நான் உங்களுக்கு சொல்லுவேன் என்று நடிகர் சிலம்பரசன் அப்போது கூறியிருக்கிறார்.