சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பாஜக உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று (டிசம்பர் 17, 2025, புதன்கிழமை) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. குறிப்பாக, பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காண்பது, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் விதம் மற்றும் வார்டு வாரியாக மக்கள் சந்திப்புகளை நடத்துவது போன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
