ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த 17 வயது சிறுமி ஒருவரை, இருவர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10-ஆம் தேதி இரவு கால்வாய் கரை அருகே ஒரு சிறுமி 17 வயதுடைய ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அந்தச் சிறுவனைத் தாக்கி அங்கிருந்த மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர், சிறுவனின் கண்முன்னே அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.
ஆரம்பத்தில் அச்சம் காரணமாக நகைப் பறிப்பு என்று மட்டும் புகார் அளித்த சிறுமியின் குடும்பத்தினர், பின்னர் சிறுமி உண்மையைச் சொன்னதும் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளித்தனர். இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
இதில் பிடிபட்ட ஒருவன் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. கைதானவர்களிடம் இருந்து குற்றச் செயலைப் பதிவு செய்த காணொலியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் பங்கிருப்பதாக என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
