உங்களுக்கு இன்னும் மகளிர் உரிமைத்தொகை வரலையா?… உடனே இதை பண்ணுங்க… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 16, 2025

Spread the love

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் மகளிர் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

அவர்களில் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி 17 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மீண்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி kmut.tnega.org என்ற இணையதள பக்கத்தில் மேல் முறையீடு செய்யலாம். இதில் விண்ணப்பம் நிராகரிப்பு, SMS வந்தும் பணம் வரவில்லை என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. அதனை தேர்வு செய்து விண்ணப்பதாரர்கள் மேல் முறையீடு செய்யலாம். அதன் பிறகு அரசிடம் இருந்து உங்களுக்கான அப்டேட் கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.