திடீர் டுவிஸ்ட்..! விஜய் உடன் கூட்டணி சேரும் ஓபிஎஸ்..? பரபரப்பில் அரசியல் களம்…!!

By Soundarya on மார்கழி 16, 2025

Spread the love

ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன,. ஓபிஎஸ் தனது ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொழிலாளர்கள் உரிமை மீட்டுக் கழகம்’  என்ற அமைப்பின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தனது ஆதரவாளர்களுடன்டிசம்பர் 23,  அன்று ஆலோசனை நடத்த உள்ளார். தனது அணியின் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் விஜய் கட்சியுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம், தங்கள் கட்சியின் தலைவர் விஜய்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதற்காக, கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுக்களையும் அமைத்துள்ளது. ஓபிஎஸ் தனது முடிவை டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரியில் அறிவிப்பார் என்று கூறப்பட்டாலும், இது வெறும் ஊகங்களே. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை