அடுத்த அதிரடி… இஸ்லாமியர்களை கவர பிரம்மாண்ட திட்டத்தை கையில் எடுத்த ஸ்டாலின்… வெளியான மாஸ் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 16, 2025

Spread the love

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு உதவும் விதமாக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் 39.20 கோடியில் ஹஜ் இல்லம் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மெக்கா நகருக்கு புனித ஹச் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பாக கட்டணம் இல்லாமல் தங்கிக் கொள்ளும் வகையில் விமான நிலையம் அருகே ஹஜ் இல்லம் அமையும் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஐந்து மாடிகள் 400 அறைகளுடன் அமைய உள்ள இந்த இல்லத்தில் நாள்தோறும் 400 பயணிகள் தங்க முடியும் என்றும் 18 மாதங்களில் கட்டுமான பணி நிறைவுபெற்ற இந்த இல்லம் பயன்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நாசர் மற்றும் அன்பரசன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று இந்திய ஹச் அசோசியேஷன் தலைவர் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் சார்பில் இந்த இல்லம் கட்டப்படும் நிலையில் இஸ்லாமியர்களுக்கு இந்தச் செய்தியை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.