ஜெயலலிதா பாணியில் ஆட்டத்தை தொடங்கும் இபிஎஸ்… இனி ஒருத்தர் கூட அதிமுகவில் இருந்து நகர முடியாது… எடப்பாடியின் மாஸ்டர் பிளான்…!

By Nanthini on மார்கழி 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக அரசியலில் இறங்கிய பிறகு திமுக மற்றும் அதிமுகவுக்கு மிகப்பெரிய போட்டியாக மாறியுள்ளது. விஜயின் வருகை ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரிய சிக்கலாகவே மாறியுள்ளது.

அதேசமயம் திமுகவை தோற்கடிக்க அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விஜயுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் விஜய்யை முதல்வர் வேட்பாளராக இருக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டமாக கூறி வருகிறது. அதேசமயம் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த பிறகு அதிமுகவிலிருந்து முக்கிய புள்ளிகள் பலரும் தொடர்ந்து விஜய் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

   

இந்நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் புது முகங்கள் 50 பேருக்கு அதிமுகவில் சீட் வழங்கப்பட்டது. அதில் பழனிச்சாமியின் தீவிர விசுவாசிகள் 15 பேர் வெற்றி பெற்றனர். வரும் சட்டசபை தேர்தலில் 75 புதுமுக வேட்பாளர்களை களம் இறக்க பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்குப் பின் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டால் எம்எல்ஏக்கள் விலை போய் விடக்கூடாது என்பதற்காக தன் விசுவாசிகளுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கவும் பழனிச்சாமி திட்டமிட்டு உள்ளாராம்.

   

கடந்த லோக்சபா தேர்தலில் பணம் படைத்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் சிலரை தேர்வு செய்து போட்டியிடும்படி பழனிச்சாமி வலியுறுத்தினார். ஆனால் தோல்விக்கு பயந்து அவர்கள் தயங்கினர். இதனால் தகுதியான வேட்பாளர்கள் இல்லாமல் சில தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. ஜெயலலிதா பாணியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட தயங்கியவர்களுக்கு சட்டசபை தேர்தலில் வாய்ப்பு தரக்கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக உள்ளார்.

 

அதே சமயம் லோக் சபா தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களில் 15 பேர் வரை சட்டசபை தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருக்கும் சீட் உறுதி செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த தேர்தலில் 35 தனி தொகுதிகளில் அதிமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் பழனிசாமி தற்போது ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.