BREAKING: 2026 தேர்தல் கூட்டணி முடிவு… சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு… பரபரக்கும் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஏறத்தாழ பெரும்பாலான கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவித்து விட்டன. ஆனால் பாமக மற்றும் தேமுதிக விடுத்த கட்சிகள் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன. இதனிடையே பிரேமலதா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. ஆனால் கூட்டணி என கூற முடியாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரமும் ஜனவரி ஒன்பதாம் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

   

இதனிடையே 2026 தேர்தலை முன்னிட்டு கடலூரில் தேமுதிக சார்பாக ஜனவரி ஒன்பதாம் தேதி மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் தேமுதிகவினர் மற்றும் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டில் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் ஜனவரி மாதத்திற்குள் கூட்டணியை இறுதி செய்த கூட்டணி கட்சி தலைவர்களையும் மாநாட்டில் பங்கேற்க வைக்க பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டுள்ளாராம்.