மக்களே உடனே கிளம்புங்க… தமிழகம் முழுவதும் இன்று(டிச..15) அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று டிசம்பர் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. பொதுவாகவே சுப முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவுகள் அதிகமாக நடைபெறும் என்பதால் பொதுமக்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

இரண்டு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களில் ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்கள் உடன் கூடுதலாக நான்கு தட்கள் முன்பதிவு டோக்கன்களும் சேர்த்து மொத்தம் 16 தட்கல் டோக்கன்களும் 150 சாதாரண டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலமாக தமிழக முழுவதும் இக்குன்று டிசம்பர் 15ஆம் தேதி மட்டும் சுமார் 1500 டோக்கன்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.